மும்பை:மும்பையில் பிரபல இயக்குனர் கரண் ஜோகர் அறிமுகமான "குச் குச் ஹோதா ஹை" படத்தின் 22 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஷாருக்கான், சல்மான் கான், கஜோல் மற்றும் ராணி முகர்ஜி நடித்திருந்த இந்தப் படத்தின் வசனங்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை.
இப்படத்தின் 22ஆம் ஆண்டு தினமான இன்று, கரண் ஜோஹர் மற்றும் கஜோல் ஆகியோர் நினைவுகளை புதுப்பித்தனர்.
1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று குச் குச் ஹோதா ஹை படம் வெளியானது. அப்போது, இத்திரைப்படம் பல விருதுகளைப் குவித்தது. மேலும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சல்மான் கானும் நடித்திருப்பார்.
1990களில் இந்தப் படம் மாபெரும் ட்ரெண்ட் செட்டாக அமைந்தது. இப்படத்தில், கல்லூரி மாணவியாக ஷாருக்கான், கஜோல், ராணி முகர்ஜி நடித்திருப்பார்கள். ராணி முகர்ஜியின் அழகு, கஜோலின் துருதுரு நடிப்பு, ஷாருக்கானின் காதல், சல்மான் கானின் ஏமாற்றம் என படம் முழுக்க ரசிக்க ஏராளமான காட்சிகள் இருந்தன என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: செல்ஃபி எடுக்க சரியான முறை இருக்கிறதா என்ன? - கஜோல்