பெண்களே நடித்து பெண் இயக்குநர் பிரியங்கா பானர்ஜி இயக்கும் 'தேவி' என்ற குறும்படம் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப்படத்தில் கஜோல், ஸ்ருதி ஹாசன், நேகா துபியா, நீனா குல்கர்னி, முக்தா பார்வே, சந்தியா மெத்ரே, ரமா ஜோஷி, ஷிவானி ரகுவன்ஷி, யஷஸ்வினி தயமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப்படம் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஒன்பது பெண்களின் வாழ்க்கை முறையையும், ஒரு சிறிய அறையில் வசிக்கும் ஒரு கூட்டுப் பெண் பறவைகளின் நடைமுறை வாழ்வியலையும் எடுத்துரைக்கும் வகையில் உருவாகி வருகிறது.