தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜாண்டி ரோட்ஸைக் கலங்கவைத்த கல்லிபாய் திரைப்படம்! - சித்தாந்த் சதுர்வேதி

ஜோயா அக்தரின் கல்லி பாய் திரைப்படம் மற்றும் அப்படத்தின் பாடல்கள், தன்னை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வர்ணனையாளர் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார் .

கல்லி பாய்
கல்லி பாய் பார்த்து கலங்கிய ஜோன்டி ரோட்ஸ்

By

Published : Jan 20, 2020, 6:58 PM IST

சமீபத்தில் ஜோயா அக்தர் இயக்கிய கல்லி பாய் திரைப்படத்தை பார்த்து ரசித்த பிரபல தென் ஆப்பிரிக்க ஃபீல்டர் ஜாண்டி ரோட்ஸ் இத்திரைப்படம் தன்னை மெய் சிலிர்க்க வைத்ததுடன், ஒரே நேரத்தில் சிரிக்கவும், அழவும் வைத்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , ’கல்லி பாய் திரைப்படத்தில் நடித்த சித்தாந்த் சதுர்வேதியை நான் சந்தித்தது முதல் கல்லி பாய் திரைப்படத்தின் பாடல்களை ரசிக்கிறேன்.

சப்டைட்டில்களுக்கு நன்றி. படத்தைக் கண்டு சிரித்து, அழுது ரசித்தேன். இந்தத் திரைப்படம் மெய்சிலிர்க்க வைத்தது’ என பதிவிட்டுள்ளார்.

ரோட்ஸின் இந்த ட்வீட்டால் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ள நடிகர் சித்தாந்த் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சித்தாந்த் சதுர்வேதி


இதையும் படிங்க: 2019இல் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ’கல்லி பாய்’
!

ABOUT THE AUTHOR

...view details