பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் 2018ஆம் ஆண்டு புற்றுநோயுடன் போராடிவந்தார். புற்றுநோய் சிகிச்சைக்காக நியூயார்க் சென்ற அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினார்.
இந்தியா திரும்பியபோதும் அவ்வப்போது உடல்நிலை சரியில்லாததன் காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இதனையடுத்து ஏப்.29ஆம் தேதி காலை ரிஷி கபூரின் உடல்நிலை மோசமானதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று ஏப்.30ஆம் தேதி காலை சிகிச்சைப் பலனின்றி மூத்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நடிகர் ரஜினிகாந்த் எனப் பல்வேறு தரப்பினரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகரும், WWE சூப்பர் ஸ்டாருமான ஜான் சினா சமூக வலைதளத்தில் பாலிவுட் நடிகர் ரிஷி கபூருக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ரிஷி கபூர் மறைவு: இதயம் உடைந்த ரஜினி!