மும்பை: பெயரிடப்படாத எல்லை தாண்டிய காதல் கதை படத்தில் நடிக்கும் அதிதி ராவ், ஹைதாரி ஜான் ஆபிரகாமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
எல்லை தாண்டிய காதல் கதை படத்தில் நடிக்கும் அதிதி ராவ்! - அதிதி ராவ் ஹைதரி
பெயரிடப்படாத எல்லை தாண்டிய காதல் கதை படத்தில் நடிக்கும் அதிதி ராவ், ஹைதாரி ஜான் ஆபிரகாமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
காஷ்வி நாயர் இயக்கத்தில், அர்ஜுன் கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இருவரும் பெயரிடப்படாத எல்லை தாண்டிய காதல் கதை படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். இப்படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம் தயாரிக்கிறார். அதுமட்டுமில்லாது, இப்படத்தில் ஜான் ஆபிரகாம், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.
ஜான் ஆபிரகாம் - அதிதி ராவ் கதாபாத்திர உடையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் அதிதி ராவ் வெளியிட்டுள்ளார். இதில் ஜான் ஆபிரகாம் தலைப்பாகையுடன், அதிதி காக்ரா சோலி அணிந்துள்ளார். தற்போது, இப்புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகளுக்கு, மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.