தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஜிகர்தண்டா' இந்தி ரீமேக்கில் நடிக்கும் தமன்னா? - அஜய் தேவ்கன்

தமிழில் அதிரி புதிரி ஹிட்டடித்த 'ஜிகர்தண்டா' படத்தின் இந்தி ரீமேக்கில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

thamanna

By

Published : Jul 21, 2019, 9:12 PM IST

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் தமன்னா. தமிழில் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக பிரபலமானார். காதல், நடனம் என ஒரு சில காட்சிகளில் வந்து சென்றாலும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். நயன்தாராவை போன்று தனக்கான தனித்த அடையாளத்தை பெற போராடி வரும் தமன்னா, தற்போது பெட்ரோமாக்ஸ் படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தமிழில் பல படங்களில் நடித்து வந்தாலும் இந்தியில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் கவலையில் ஆழ்ந்து வந்தார் தமன்னா. தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பாபிசிம்ஹா நடித்த 'ஜிகர்தண்டா' படத்தின் இந்தி ரீமேக்கில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தயாரிக்கும் இப்படத்தினை அபிஷேக் இயக்குகிறார். பாபிசிம்ஹா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்க இருக்கிறார். சித்தார்த் வேடத்தில் கார்த்திக் ஆர்யன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

'ஜிகர்தண்டா' திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, அந்த மொழிகளிலும் பெரிய வெற்றியை பெற்றது. பாலிவுட் அதிக வணிகச்சந்தை கொண்டுள்ளதால் இந்தி ரீமேக்கில் ஜிகர்தண்டா பலசாதனைகள் புரிய வாய்ப்புள்ளது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சஞ்சய் தத்தின் மிரட்டலான நடிப்பை இதில் காணமுடியும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details