கார்கில் போரில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் பலரை பெண் ராணுவ பைலட் குஞ்ஜன் சக்சேனா காப்பற்றினார். இவரின் செயலைப் பாராட்டும் விதமாக இவருக்கு சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. அதன்பின் இவரை ’கார்கில் கேர்ள்’ என்று செல்லப் பெயருடன் அழைக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில், இவரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பில் 'குஞ்சன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் சரண் சர்மா இயக்கிய இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரித்துள்ளார்.
முன்னதாக, இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால், கரோனாவால் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜான்வி கபூரின் 'தி கார்கில் கேர்ள்' வெளியாகும் தேதி அறிவிப்பு! - தி கார்கில் கேர்ள்
புதுடெல்லி: நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'குஞ்சன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்' திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜான்வி கபூர்
இதுகுறித்து ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”போருக்குச் சென்ற இந்தியாவின் முதல் பெண் விமானப் படை அலுவலரின் கதையில் நடித்தது பெருமிதம் அளிக்கிறது. எனக்கு ஊக்கமளித்ததைப் போன்று படம் உங்களையும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.