மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் 'தடக்' படத்தின் மூலம் அறிமுகமானர். இந்தப் படம் மராத்தியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'சாய்ராத்' படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்தது.
சின்ன மயிலுக்கு இங்கதான் கல்யாணம்... கல்யாண விருந்து இதுவா...! - திருப்பதி
நடிகை ஜான்வி கபூர் தனது திருமணம் பற்றிய கனவுகளை தற்போது தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து 'கார்கில் கேர்ள்', 'தோஸ்தானா 2' உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ள அவர், தமிழ், தெலுங்கில் நடிப்பதற்கு ஆர்வமாக கதை கேட்டுவருவதாகக் கூறப்படுகிறது. மேலும், 'தல60' படத்தில் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் தனது திருமணம் எப்படி நடக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். தனது திருமணம் பாரம்பரிய முறைப்படி நடக்க வேண்டும். காஞ்சிபுரம் பட்டு சேலை உடுத்தி தமிழ் பெண்ணாக இருக்க வேண்டும். தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, சாம்பார், தோசை, தயிர் சாதம் போன்ற உணவு வகைகளை பரிமாற வேண்டும். அதுவும் எளிமையான முறையில் திருப்பதியில் நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.