பாலிவுட் இளம் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'குஞ்சன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்'. ஓடிடியில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஜான்வி சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடையே தொடர்பில் இருந்துவருகிறார். அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள், காணொலிகள் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்படுகிறது.
2020 நிலைமை இப்படித்தான் இருக்கு: புகைப்படத்தில் விளக்கிய ஜான்வி கபூர்! - ஜான்விகபூரின் லேட்டஸ் செய்திகள்
மும்பை: நடிகை ஜான்வி கபூர் 2020ஆம் ஆண்டின் நிலையை விளக்கும் விதமாக சமீபத்தில் போட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Janhvi
அந்தவகையில், தற்போது ஜான்வி 2020ஆம் ஆண்டின் நிலைமையை விளக்கும்விதமாக சமீபத்தில் போட்டோஷூட்டில் கலந்துகொண்டு இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில் மகிழ்ச்சியுடனும் இரண்டாவது புகைப்படத்தில் குழப்பம் கலந்த முகபாவமும் கொடுத்துள்ளார்.
இந்தாண்டு இந்த இரண்டையும் ஒன்றாக வைத்திருக்க முயற்சிக்கிறது எனத் தலைப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களால் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.