ஹைதராபாத்: ஜான்வி தனது தந்தை போனி கபூரிடம் பொய் சொல்லிவிட்டு லாஸ் வேகாஸ் சென்றது குறித்து பகிர்ந்துள்ளார்.
கரினா கபூரின் ரேடியோ ஷோவில் கலந்துகொண்ட ஜான்வி, தனது தந்தையிடம் திரைப்படத்துக்கு போவதாக கூறிவிட்டு லாஸ் வேகாஸ் சென்றது குறித்து பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து ஜான்வி, என் அப்பாவிடம் ஒருமுறை பொய் சொல்லிவிட்டு லாஸ் வேகாஸுக்கு ஃபிளைட் ஏறிவிட்டேன். அங்கு போய் கொஞ்ச நேரம் ஊர் சுற்றிவிட்டு அடுத்த ஃபிளைட்டில் திரும்பி வந்தேன். அதன்பிறகே என் தந்தையிடம் இதுபற்றி கூறினேன் என்றார்.