பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் வீட்டில் பணிசெய்யும் நபர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போனி கபூர் தரப்பில் வெளியான அறிக்கையில், "போனி கபூர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த 23 வயது நபர் ஒருவர் சமீபத்தில் உடல் நலமின்றி இருந்ததையடுத்து, அவருக்கு உடனடியாகக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார். மும்பை மாநகராட்சி அலுவலர்கள் அவருக்குத் தேவையான ஆலோசனையை வழங்கி வருகின்றனர்.