தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நாக்க முக்க பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ’குட்டி மயில்’ ஜான்வி! - நாக்க முக்க பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ஜான்வி

12 ஆண்டுகளுக்கு முன் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டான தமிழ்ப் பாடலான ’நாக்க முக்க’ பாடலுக்கு, நடிகை ஜான்வி கபூர் தன் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ பகிர்ந்துள்ளார்.

Janhvi Kapoor
Janhvi Kapoor

By

Published : Jul 17, 2021, 6:48 PM IST

நகுல், சுனைனா நடிப்பில் 2008ஆம் ஆண்டு வெளியான படம் ’காதலில் விழுந்தேன்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாக்க முக்க’ பாடல் அப்போது பட்டி தொட்டியெல்லாம் பெரும் ஹிட்டானது.

தொடர்ந்து ஐபிஎல் மைதானங்களில் ஒலிபரப்பப்பட்டது தொடங்கி, இப்பாடல் இந்திய அளவில் டிரெண்டானது. இன்று வரை பலரையும் குத்தாட்டம்போட வைத்து வரும் இப்பாடலுக்கு பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் படங்களில் ஜான்வி தற்போது நடித்து வந்தாலும், தன் அம்மா ஸ்ரீதேவியின் நடிப்பு பயணத்தின் வேர்களான தென் இந்தியப் படங்களும், அவற்றின் பாடல்களும் தான் தனக்கு அதிக விருப்பமானவை என பல நிகழ்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து கூறிவருகிறார்.

அதன்படி, தமிழ் பாடலான ’நாக்க முக்க’ பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டா ரீலில் ஜான்வி அதனைப் பதிவிட்டுள்ளார். மேலும் தன் நண்பர்கள் குழுவுக்கு ’அக்சா கேங்’ எனப் பெயரிட்டுள்ள ஜான்வி, இதற்கு முன்பாகவே தனது இந்த நண்பர்கள் குழுவுடன் வேறு சில வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

நாக்க முக்க’ பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ’குட்டி மயில்’ ஜான்வி

இந்நிலையில், தனது தங்கை ஜான்வி கபூர் மற்றும் அவரது நண்பர்களின் இந்தக் குத்தாட்ட வீடியோவை நடிகர் அர்ஜூன் கபூர் பகிர்ந்து கேலி செய்து பதிவிட்டுள்ளார்.

ஜான்வி கபூர் தற்போது ’தோஸ்தானா 2’ படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது ’குட் லக் ஜெர்ரி’ படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:விருமாண்டி ஸ்டைலை பின்பற்றவுள்ள சூர்யா!

ABOUT THE AUTHOR

...view details