தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அதிரடி காட்சிகளுடன் வெளியான ஜான்வி கபூரின் 'குஞ்சன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்' ட்ரெய்லர்! - தி கார்கில் கேர்ள் ட்ரெய்லர்

நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'குஞ்சன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Kargil
Kargil

By

Published : Aug 1, 2020, 5:32 PM IST

கார்கில் போரில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் பலரை பெண் ராணுவ பைலட் குஞ்ஜன் சக்சேனா காப்பற்றினார். இவரின் செயலைப் பாராட்டும் விதமாக, இவருக்கு சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. அதன்பின் இவரை ’கார்கில் கேர்ள்’ என்று செல்லப் பெயருடன் அழைக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், இவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பில் 'குஞ்சன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் சரண் சர்மா இயக்கிய இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரித்துள்ளார்.

முன்னதாக, இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால், கரோனாவால் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஒரு பெண் எப்படி இந்திய விமானப்படையில் சேர்ந்து கார்கில் போரில் போது எப்படி இந்திய வீரர்களை கப்பாற்றினார். இந்திய விமானப்படையில் பெண்ணாக இருந்து தனக்கு இருந்த தடைகளை எப்படி தகர்த்தெறிந்தார் என்பதை ட்ரெய்லர் வெளிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது ஒரு பெண்ணோ ஆணோ விமானத்தை இயக்கினால், அவர்கள் பைலட் என அழைக்கப்படுவார்கள் என்று தந்தை தனது மகளான குஞ்சனுக்குக் கூறி அதை எளிதாக்குகிறார். இந்த ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படம் குறித்தான எதிர்பார்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details