தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒரு நாள் ஆக்ஷன் ஹீரோயினாக மாறுவேன் - ஜாக்குலின் பெர்னாண்டஸ் - ஜாக்குலின் பெர்னாண்டஸின் படங்கள்

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆக்ஷன் ஹீரோயினாக திரையில் வலம் வர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Jacqueline
Jacqueline

By

Published : May 30, 2020, 7:33 PM IST

'கிக்', 'மர்டர் 2', 'ரேஸ் 3' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து பாலிவுட்டில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் தற்போது தனது திரைவாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது தொழில் வாழ்க்கையில், மிகச் சிறந்த சிலருடன் பணியாற்றியதை நினைத்து பார்க்கையில் மிகவும் பெருமையாக உணர்கிறேன். அது இயக்குநர்களாகவோ அல்லது நடிகர்களாகவோ இருக்கலாம். இது வரை நான் நடித்த படங்கள் ஒவ்வொன்றிலும் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். இது என்னை தனி நபராகவும் நடிகையாகவும் மேலும் வளர்வதற்கு உதவியது.

நான் தொடர்ந்து எனது சிறப்பை ரசிகர்களுக்கு கொடுப்பேன் என நம்புகிறேன். வெவ்வேறு அனுபவங்கள் என்னை மிகவும் உறுதியானவளாக மாற்றியுள்ளது. த்ரில்லர், ஆக்ஷன், டிராமா, காமெடி என பல ஜானார்களில் நடித்துள்ளேன். ஆனால் எனக்கு ஆக்ஷன் ஹீரோயினாக மாற ஆசைப்படுகிறேன். ஆக்ஷனை விரும்பும் நான் ஒருநாள் நிச்சயம் ஆக்ஷன் ஐகானாக இருப்பேன் என நம்புகிறேன்.

கரோனா காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக உலகம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. திரைத்துறையும் இந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது. இப்போதைய காலகட்டத்தில் OTT பார்வையாளர்களுக்கு முக்கிய பொழுது போக்கு அம்சமாக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: யோகா வீடியோக்களால் ரசிகர்களை சூடேற்றிய ஜாக்குலின்

ABOUT THE AUTHOR

...view details