தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரன்வீரோடு ஒரே திரையில் தோன்றவுள்ளேன்! - உற்சாகத்தில் ஷாலினி பாண்டே - பாலிவுட் செய்திகள்

அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே, ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் ’ஜெயேஷ்பாய் ஜோர்தார்’ திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ள நிலையில், ரன்வீரோடு திரையைப் பகிர்வது தனது நடிப்புத்திறமையை நிச்சயம் மேம்படுத்தும் என உற்சாகமாகக் கூறியுள்ளார்.

Jayeshbhai Jordaar
Ranveer singh Shalini Pandey starring together in Jayeshbhai Jordaar

By

Published : Jan 11, 2020, 9:32 PM IST

அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக ’ஜெயேஷ்பாய் ஜோர்தார்’ திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் திவ்யாங் தக்கர் இயக்கவுள்ள இத்திரைப்படத்தில், அபர்ஷக்தி குரானா, போமன் ஈரானி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

தன் முதல் படத்திலேயே பிரபல நடிகர் ரன்வீர் சிங்குடன் அறிமுகமாவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷாலினி பாண்டே, இதைவிட சிறந்த பாலிவுட் அறிமுக வாய்ப்பு தனக்கு அமைந்திருக்காது என உற்சாகமாகக் கூறியுள்ளார். மேலும் யாஷ் ராஜ் நிறுவனத்தால் தான் அழைக்கப்பட்டு இப்படத்திற்காக உறுதி செய்யப்பட்டது, தனது நடிப்புத்திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயேஷ்பாய் ஜோர்தார் பட போஸ்டர்

பாலிவுட்டில் அறிமுகமாக ஜெயேஷ்பாய் ஜோர்தார் திரைப்படத்தை விட சிறந்த வாய்ப்பு தனக்கு அமைந்திருக்காது எனத் தெரிவித்த அவர், இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநரை ஆடிஷனின்போது ஈர்த்தது அதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரன்வீர் ஒரு அபாரமான நடிகர் என்று கூறிய அவர், கதைக்குத் தேவையான நுட்பமான உணர்வுகளை வழங்குவதில் ரன்வீர் திறமை வாய்ந்தவர் என்றும், அவரோடு திரையைப் பகிரும்போது தான் அவரைப் போல் இரண்டு மடங்கு கவனம் செலுத்தி திரையில் மிளிரத் தயாராக வேண்டும் என்பதால் திரைப்படம் முடிவடையும் தருவாயில் நிச்சயம் தன் நடிப்புத்திறமை மேம்பட்டுவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அறிவார்ந்த கதாபாத்திரம் பேட்மேன் - ராபர்ட் பேட்டின்சன் பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details