தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அப்போ கரண் ஜோஹர்... இப்போ ஷாருக் கான்...: படங்களிலிருந்து விலகிய கார்த்திக் ஆர்யன் - குட்பை ஃப்ரெட்டீ

மும்பை: நடிகர் ஷாருக் கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் தயாரிக்கும் 'குட்பை ஃப்ரெட்டீ' படத்திலிருந்து நடிகர் கார்த்திக் ஆர்யன் விலகியுள்ளார்.

Kartik Aaryan
Kartik Aaryan

By

Published : May 28, 2021, 8:47 PM IST

பாலிவுட் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் கார்த்திக் ஆர்யன். இவர் நடிகர் ஷாருக் கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் தயாரிப்பில் அஜய் பல்லின் இயக்கத்தில் 'குட்பை ஃப்ரெட்டீ' என்னும் படத்தில் நடிக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கு முன்பணமாக ரூ.2 கோடி கார்த்திக் ஆர்யனுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.

தற்போது இந்தப் படத்திலிருந்து கார்த்திக் ஆர்யன் விலகியுள்ளார். அதற்குக் காரணம் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு தரப்பு இந்தப் படத்தின் கதை கார்த்திக் ஆர்யனுக்கு தொடக்கத்தில் சொன்ன விதமும், தற்போது திரைக்கதை பெற்று முழுவடிவம் பெற்ற விதமும் வேறாக இருந்ததால், அது பிடிக்காமல் கார்த்திக் ஆர்யன் விலகியதாக கூறுகின்றனர்.

அதேபோல் தான் முன்பணமாக வாங்கிய ரூ.2 கோடியை கார்த்திக் ஆர்யன் ரெட் சில்லீஸ் நிறுவனத்திடம் திருப்பி வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் கரண் ஜோஹர் உருவாக்கி வரும் 'தோஸ்தானா 2' படத்தில் கார்த்திக் ஆர்யனின் தொழில்முறை நடத்தை சரியாக இல்லை எனக்கூறி வெளியேற்றினார். தற்போது ஷாருக் கானின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கார்த்திக் ஆர்யன் அவராகவே விலகியுள்ளார்.

பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் கார்த்திக் ஆர்யனுக்கு, இதன் மூலம் அவரது சினிமா வாழ்க்கையில் இழப்புகள் வரலாம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details