ஹைதராபாத்: 7 மாதங்களாக தனது சொந்த ஊரான சண்டிகரில் இருந்த ஆயுஷ்மான் குரானா, நேற்று அவரது குடும்பத்தினருடன் மும்பை திரும்பினார். அவர் ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாலேயே மும்பை திரும்பியதாக கூறப்படுகிறது.
பாலிவுட் வட்டாரங்களில் ஆயுஷ்மான் மும்பை திரும்பியது குறித்து பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. பாலிவுட்டின் முக்கியமான இயக்குநர் ஒருவருடன் அவர் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021ஆம் ஆண்டு தான் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக குரானா அறிவித்திருந்தார். அதில் சண்டிகர் கரே ஆசிகி, டாக்டர் ஜி ஆகிய இரண்டு படங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகின. தற்போது குரானா தனது மூன்றாவது படம் குறித்து அறிவிக்கவே மும்பை வந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆயுஷ்மான ரசிகர்கள் அவரது மூன்றாவது பட அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடர் ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ஆயுஷ்மான். அவர் படங்களின் மையக்கரு சமூக அக்கறை உணர்வுடன் இருப்பதால், இந்தியா முழுவதும் பிரபலமாக அறியப்படும் நடிகராகிவிட்டார்.