மும்பை: எனது ஆங்கில புலமையை பாலிவுட் திரையுலகினர் கேலி செய்கின்றனர். அதன் காரணமாக நான் இந்தி பேசுவதில் முன்னுரிமை அளிக்கிறேன் என்று பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
கங்கனாவின் தங்கை ரங்கோலி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவில் பேசியிருக்கும் கங்கனா, இந்தி திரையுலகினர் எனது ஆங்கில புலமையை கேலி செய்கின்றனர். பலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். ஆனாலும் ரசிகர்களிடையே என்னை கொண்டு சேர்த்து எனது வெற்றிக்கு காரணமாக இருக்கும் இந்தி மொழிக்கே முன்னுரிமை அளிக்கிறேன்.
இந்தி நமது தேசிய மொழி. ஆனால் நாட்டு மக்கள் அதை பேசுவதற்கு கவலைப்படுகின்றனர். 'ஏ' 'பி' 'சி' என்ற ஆங்கில எழுத்துகள் சொல்வதில் வரும் தன்னம்பிக்கை 'க', 'கா' என்று சொல்வதில் வருவதில்லை. ஒவ்வொரு பொற்றோரும் தங்களது பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசுவது கண்டு பெருமைகொள்கின்றனர்.