தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

HBD பிரியங்கா சோப்ரா பிறந்தநாள் - பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இன்று (ஜூலை 18)39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

HBD Priyanka Chopra
HBD Priyanka Chopra

By

Published : Jul 18, 2021, 9:20 AM IST

இந்திய சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் 1982 ஜூலை 18 ஆம் தேதி பீகார் ஜாம்ஷெட்பூரில், இந்திய ராணுவத்தில் மருத்துவர்களாக பணியாற்றிய அசோக்-மது சோப்ரா தம்பதிக்கு பிறந்தார். இவரது பெற்றோரின் தொழில் காரணமாக, இவர் டெல்லி, சண்டிகர், அம்பாலா, லடாக், லக்னோ, பரேலி, புனே உள்ளிட்ட இடங்களில் வசித்துள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை

பிரியங்கா தனது 13ஆவது வயதில், படிப்பதற்காக அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு அவரது அத்தையுடன் வாழ்ந்தார். பின் நியூட்டன், மாசசூசெட்ஸ் அயோவாவின் சிடார் ராபிட்ஸ் ஆகிய பள்ளிகளில் பயின்றார். பின்னர் மாசசூசெட்ஸில் இருந்தபோது, ​​அவர் பல நாடக தயாரிப்புகளில் பங்கேற்றுள்ளார். மேலும் மேற்கத்திய பாரம்பரிய இசை மற்றும் பாடல்களையும் பாடியுள்ளார்.

பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பிரியங்கா இந்தியாவுக்குத் திரும்பினார். பரேலியில் உள்ள இராணுவ பொதுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

பன்முகத் தன்மை

உலக அழகி

இந்த காலகட்டத்தில், சோப்ரா உள்ளூர் மே ராணி அழகுப் போட்டியை வென்றார். அதன் பிறகு அவரை ரசிகர்கள் பின்தொடரத் தொடங்கினர். இதையடுத்து 2000 ஆம் ஆண்டின் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்து, பட்டத்தை வென்றார்.இதனை தொடர்ந்து மிஸ் வேர்ல்ட் போட்டியில் பட்டம் வென்றார்.

அழகென்றால் அவள் தானா

இவர் நடிகை மட்டுமின்றி பாடகி, திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இரண்டு தேசிய திரைப்பட விருது, ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டில்,அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மேலும் டைம் என்ற அமெரிக்க பத்திரிக்கை அவரை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக பெயரிட்டது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஃபோர்ப்ஸ் பத்திரிகை, உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக பட்டியலிட்டது.

அழகிய தருணம்

திரை உலகம்

சோப்ரா ஆரம்பத்தில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிக்க விரும்பினாலும், தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) திரைப்படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். முன்னதாக தமிழில், தமிழன் (2002) என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் “உல்லத்தை கொல்லாதே” என்ற பாடலை நடிகர் விஜயுடன் இனைந்து பாடியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளான ஆண்டாஸ் (2003), முஜ்ஸே ஷாதி கரோகி (2004) ஆகியவற்றில் முன்னணி பெண்ணாக நடித்தார், மேலும் 2004 ஆம் ஆண்டு த்ரில்லர் ஐத்ராஸில் படத்திற்காக, அவரது மூர்க்கத்தனமான பாத்திரத்திற்காக பாராட்டு பெற்றார். கிரிஷ் மற்றும் டான் (2006) ஆகியவற்றில் அதிக வருமானம் ஈட்டிய தயாரிப்புகளில் நடித்த இவர், பின்னர் தனது கதாபாத்திரத்தை மேன்மைபடுத்தி கொண்டார்.

காதல் கணவன்


2015 முதல் 2018 வரை, குவாண்டிகோ என்ற ஏபிசி த்ரில்லர் தொடரில் அலெக்ஸ் பாரிஷாக நடித்த அவர், தி ஸ்கை இஸ் பிங்க் (2019) என்ற வாழ்க்கை வரலாற்றுடன் சினிமாவுக்கு திரும்பினார். சோப்ரா பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.காமினி (2009), 7 கூன் மாஃப் (2011), பார்பி (2012), மேரி கோம் (2014), தில் தடக்னே டோ (2015) மற்றும் பாஜிராவ் மஸ்தானி (2015) படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

சுற்றுச்சூழல், பெண்கள் உரிமைகள் போன்ற சமூக பிரச்னைகளை ஊக்குவிப்பதும், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி குரல் கொடுத்தவர் சோப்ரா. 2006 முதல் யுனிசெஃப் உடன் பணிபுரிந்து 2010, 2016 ஆம் ஆண்டுகளில் குழந்தை உரிமைகளுக்கான தேசிய, உலகளாவிய யுனிசெஃபின் தூதராக நியமிக்கப்பட்டார்.

அழகு குட்டி செல்லம்

ஒரு ரெக்கார்டிங் கலைஞராக, சோப்ரா மூன்று தனிப்பாடல்களை வெளியிட்டுள்ளார். அவரது பல திரைப்பட பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனமான பர்பில் பெப்பிள் பிக்சர்ஸ் மூலம் பாராட்டப்பட்ட மராத்தி திரைப்படமான வென்டிலேட்டர் (2016) உட்பட பல பிராந்திய இந்திய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

காதல் பயணம்

சோப்ரா மே 2018 இல் அமெரிக்க பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார்.

டிசம்பர் 2018 இல், இந்த ஜோடி ஜோத்பூரின் உமைத் பவன் அரண்மனையில் பாரம்பரிய இந்து மற்றும் கிறிஸ்தவ முறைபடி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தைத் தொடர்ந்து, சோப்ரா தனது முழுப் பெயரையும் "பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்" என்று சட்டப்பூர்வமாக மாற்றினார். மேலும் அவரது திரைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை, அவ்வப்போது கணிசமான ஊடகங்களில் ஒளிபரப்பி வருகிறார்.

இந்த ஆண்டு அவர், அன்ஃபினிஷெட் என்ற நினைவு குறிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இன்று (ஜூலை 18) அவர் தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையும் படிங்க:HBD SMRITHI MADHANA: பெண்கள் கிரிக்கெட்டில் ஒளிரும் நட்சத்திரம்

ABOUT THE AUTHOR

...view details