பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் 2018ஆம் ஆண்டு புற்று நோயுடன் போராடிவந்தார். புற்றுநோய் சிகிச்சைக்காக நியூயார்க் சென்ற அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினார்.
இந்தியா திரும்பிய போதும் அவ்வப்போது உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வண்ணமாக இருந்தார்.
இதனையடுத்து நேற்று (ஏப்.29) காலை ரிஷி கபூரின் உடல்நிலை மேசமானதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (ஏப்.30) காலை சிகிச்சை பலனின்றி ரிஷி கபூர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ரிஷி கபூர் கடைசியாக ஜீத்து ஜோசப் இயக்கிய 'தி பாடி' படத்தில் நடித்திருந்தார். 2015ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான 'தி இன்டர்ன்' படத்தின் இந்தி ரீமேக்கில் தீபிகா படுகோனேவுடன் ரிஷி கபூர் நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது