உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள 21 நாள்கள் தேசிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார்.
கத்ரீனா வீட்டை பெருக்க... ஹர்பஜன் கமெண்ட் போட... அடடா என்ன வீடியோன்னு குதுகலமான ரசிகர்கள்! - கத்ரீனா கைஃப்பின் படங்கள்
தேசிய ஊரடங்கு உத்தரவையடுத்து பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் வீட்டை சுத்தம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதனையடுத்து திரைப்பிரபலங்கள் தற்போது தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு தங்களுக்கு விருப்பமான செயல்களை செய்துவருகின்றனர். தற்போது கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இசபெல் கைஃப் பின்னணியில் அவரை கிண்டல் செய்ய சாதாரன டி-ஷர்ட் அணிந்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். இறுதியில் விளக்குமாறை கிரிக்கெட் பேட் போன்று கற்பனை செய்து விளையாடுகிறார். இது நல்ல உடற்பயிற்சி என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த வீடியோவிற்கு ஹர்பஜன் சிங், நல்ல ஷாட் என்று பதிவிட்டுள்ளார். கரீனாவின் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.