பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையில் போதைப் பொருள்கள் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் நடைபெற்றுவரும் விசாரணையில், ரகுல் ப்ரீத் சிங் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் தொடக்கத்தில் இருந்தே ரகுல் ப்ரீத் சிங் பெயர் ஊடகங்களில் பல்வேறு விதமாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், ”ரியா சக்கரவர்த்தி சிக்கியுள்ள போதைப்பொருள் வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், ஊடகங்கள் எனது பெயரை அந்த வழக்குடன் வேண்டுமென்றே இணைக்கிறார்கள். இது எனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது.
நான் எந்த தீய பழக்கங்களும் இல்லாத நபர் - ரகுல் ப்ரீத் சிங் - டெல்லி உயர்நீதிமன்றம்
புதுடெல்லி: தான் புகை பிடிக்காத எந்த தீய பழக்கங்களும் இல்லாத நபர் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
எனவே எனது பெயரை இவ்வழக்கில் இணைப்பதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்துவதற்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க இந்திய பிரஸ் கவுன்சில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் இதன் நிலை என்னவென்று பதிலளிக்க அக்டோபர் 15ஆம் தேதிவரை நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
காணொலி மூலமாக நடைபெற்றுவரும் இந்த விசாரணையில், ரகுல் ப்ரீத் சிங்கின் வழக்கறிஞர், அறிவுறுத்தப்பட்ட எந்த அமைப்புகளும் தங்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
வழக்கு விசாரணை நடக்கும்போது அது பற்றிய செய்திகளை தடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கில், நான் சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளேன். ஆனால் நான் போதை மருந்து வைத்திருப்பதாகவும் அதை உட்கொள்வதாகவும் பொய்யான செய்திகள் பரவுகின்றன.
எனக்கு புகைக்கும் பழக்கமோ வேறு எந்த தீய பழக்கங்களோ இல்லை” குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் தரப்பில், பல செய்தி சேனல்கள் தங்கள் சங்கத்தில் உறுப்பினராகவே இல்லை. உண்மையான தகவலின் அடிப்படையில், செய்திகள் ஒளிபரப்பானது என்பது குறித்தே இந்த பிரச்னை. எனவே இதற்கு அந்த சேனல்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கையில், ரகுல் ப்ரீத் சிங்கின் புகாரின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.