பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர், தனுஷ், துல்கர் சல்மான் என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமா மட்டுமில்லாது பேஷன் ஆடைகள், ஆபரணங்கள், மேக்கப் பொருட்கள் என லேட்டஸ்ட் விஷயங்களை பாலிவுட்டினருக்கு அறிமுகப்படுத்தி ட்ரெண்ட் செட்டராக இருந்துவருகிறார். அதே போல் சமூக வலைதளப்பக்கத்திலும் கருத்துகளை பதிவிட்டு ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இந்த மாதம் மட்டும் மூன்று முறை பயணம் செய்துள்ளேன். இதில் இரண்டு முறை எனது லக்கேஜ்ஜை இழந்துவிட்டேன். இனி பிரிட்டடிஷ் ஏர்வேஸை பயன்படுத்தக்கூடாது என்று இதிலிருந்து பாடம் கற்றுள்ளேன் என்று பதிவிட்டு அந்த விமான நிறுவனத்துக்கும் டேக் செய்திருந்தார்.
அவரின் இந்த பதிவுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், லக்கேஜ் தாமதத்திற்கு மன்னிக்கவும். இது குறித்து விமான நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்போது உங்களுக்கு டிராக்கிங் ரெஃப்ரன்ஸ் வழங்கப்பட்டது என அவருக்கு ரீ டிவீட் செய்திருந்தது.