தனியார் தொலைக்காட்சி ஒன்றின் 'த லவ் லாஃப் லிவ் ஷோ' எனப்படும் செலெபிரேட்டிகளுக்கான உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை இலியானா டி க்ரஸ், தன்னைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
நடிகை ஷிபானி தண்டேகரால் தொகுத்து வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இலியானா, தான் திரைத் துறைக்கு வந்தது ஒரு விபத்துதான் எனக் கூறியுள்ளார். நடிகையாகாவிட்டால் உங்களது அடுத்தத் தேர்வு என்ன என்ற கேள்விக்கு, ”நான் நடிகையாகாவிட்டால், எனது ’ப்ளான் பி’ இசைத்துறைதான். அதன்படி நான் ஒரு பாடகியாக உருவெடுத்திருப்பேன்” என்று பதிலளித்தார்.
கோலிவுட் தொடங்கி, டோலிவுட்டில் தன் அழகிய உடல்வாகால் பெரும் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்து, பாலிவுட்டில் கவர்ச்சி தாண்டி, பர்ஃபி உள்ளிட்ட படங்களின் மூலம் தன் நடிப்புத்திறமையை நிரூபித்த நடிகை இலியானாவிடம் அவருக்கு உடன் பணியாற்றப் பிடித்த மூன்று நடிகர்களைப் பற்றி கூறுமாறு கேட்கப்பட்ட கேள்விக்கு, ராக் ஸ்டார் புகழ் நர்கீஸ் ஃபக்ரி, அர்ஷாத் வர்ஸி, வருண் தவான் ஆகியோரின் பெயர்களைக் கூறியுள்ளார்.