தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். இவர் கடந்த சில நாள்களுக்கு முன் பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப், தன்னிடம் அத்தமீறியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது குறித்து பாயல் கோஷ் கூறுகையில், "இந்தச் சம்பவம் 2014ஆம் ஆண்டு அவர் பாம்பே வெல்வெட் படத்தை இயக்கியபோது நடந்தது. அவரது அலுவலகத்துக்கு நான் பட வாய்ப்பு கேட்டு சென்றபோது அவர் என்னையே உற்றுப் பார்த்தார்.
அதன் பின் சில முறை அவர் அலுவலகங்களுக்கு வர சொன்னார். அவ்வாறு ஒரு முறை சென்றபோது அவர் குடித்திருந்தார். எதையோ புகைத்துக்கொண்டும் இருந்தார். அப்போது சோபாவில் அமர்ந்திருந்த என் மீது அவர் படுக்க முயன்றார். நான் விட்டு விடும்படி கெஞ்சினேன்.
அப்போது 200க்கும் மேற்பட்ட பெண்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துள்ளனர் என்று பெருமையாக கூறினார். பின் ஒருவழியாக அவரது வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன். இருப்பினும், அவர் மீண்டும் மீண்டும் பலமுறை என்னை அழைத்தார். நான் போகவில்லை" என்று தெரிவித்திருந்தார்.