தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன் - கங்கனாவின் வைரல் வீடியோ - போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தது குறித்து கங்கனா பேசிய வீடியோ

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தது குறித்து கங்கனா பேசிய பழைய காணொலி ஒன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

By

Published : Sep 11, 2020, 10:10 PM IST

பாலிவுட்டுக்குள் நுழைந்தபோது தான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததை கங்கனா ரனாவத் ஒப்புக் கொள்ளும் காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கங்கனா பதிவிட்ட பழைய காணொலி ஒன்றில், தான் தனது 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறியது குறித்து கங்கனா பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஓரிரு ஆண்டுகளில் அவர் ஒரு பிரபல பாலிவுட் நட்சத்திரமாக மாறினாலும், அதற்கு மிகப்பெரிய விலையாக தவறான சில நண்பர்களுடன் நட்பு பாராட்டி அவர் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நிலைமை தீவிரமைடந்து ”இதற்கு மரணமே ஒரே தீர்வு” என தான் உணர்ந்ததாகவும் கங்கனா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையைத் தொடர்ந்து திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து கங்கனா பெரிய அளவில் குரல் எழுப்பி வருகிறார். மேலும், நடிகர்கள் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல், இயக்குநர் அயன் முகர்ஜி ஆகியோர் ரத்தப் பரிசோதனை செய்து தாங்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகவில்லை என நிரூபிக்க வேண்டும் என்றும் கங்கனா தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத், தான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தது குறித்து பேசிய காணொலி

மேலும், போதைப் பழக்கம் குறித்த சோதனையை தன்னிடம் மேற்கொள்ளும்படியும், தான் போதைப்பொருள் உட்கொண்டது நிரூபிக்கப்பட்டால் மும்பையை விட்டு வெளியேறிவிடுவேன் என்றும் கங்கனா முன்னதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :டோப் பரிசோதனைக்கு மாதிரிகளை வழங்கிய சஞ்சனா, ராகினி

ABOUT THE AUTHOR

...view details