2006ஆம் ஆண்டு வெளியான 'ரங் தே பசாந்தி' மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்தன் ராய் சன்யால். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் உங்களுக்கு ஏதேனும் கனவு கதாபாத்திரம் இருக்கிறதா எனக் கேட்டனர்.
அதற்குச் சந்தன், 'திரைத் துறையில் இருக்கும் ஒவ்வொரு நடிகனுக்கும் நடிகைக்கும் கனவு கதாபாத்திரம் இருக்கிறது. எனக்கு, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற 'ஜோக்கர்' நாயகன் வகீன் பீனிக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளது. அப்படத்தில் அவரின் உடல் மொழி எனக்கு மிகவும் பிடித்துள்ளது' என்றார்.