தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

“அதற்கு எப்படி நான் பொறுப்பாக முடியும்”-  ராவத் அடித்த அந்தர் பல்டி! - மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: கங்கனா ரணாவத்தின் தயாரிப்பு நிறுவன அலுவலகம் இடிக்கப்பட்டதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

கங்கனா
கங்கனா

By

Published : Sep 10, 2020, 5:34 PM IST

மும்பை மேற்கு பாந்த்ராவில் உள்ள கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடிக்க மும்பை மாநகராட்சி ஆணையத்திற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், “மும்பை நகர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல மாறியுள்ளது” என கங்கனா கூற, மகாராஷ்டிராவை அவமதித்த கங்கனாவை மும்பைக்குள் வரக்கூடாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சூளூரைத்தார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இந்நிலையில், கங்கனாவின் அலுவலகம் இடிக்கப்பட்டதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் ஒருபோதும் கங்கனாவை அச்சுறுத்தியதுமில்லை, மிரட்டியதுமில்லை. கங்கனா மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனக் கூறியதால் நான் என் கோபத்தை வெளிப்படுத்தினேன். மும்பை மாநகராட்சி ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன் நடவடிக்கைக்கு நான் பொறுப்பல்ல. கங்கனா மும்பையில் வாழ வரவேற்கப்படுகிறார்" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details