தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அரசியலுக்கு தயாராகவில்லை - சோனுசூட் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகப் பேட்டி

புதுடெல்லி: கரோனா தொற்றுகாலத்தில் ரியல் சூப்பர் ஹீரோவாக களத்தில் நின்று பொதுமக்களுக்கு உதவிய சோனுசூட் ஈடிவி பாரத்தின் டெல்லி மாநிலத் தலைவர் விஷால் சூர்யாகாந்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், தனது பணி, சேவை குறித்துப் பேசினார்.

Sonu
Sonu

By

Published : Jun 15, 2021, 3:39 AM IST

Updated : Jun 15, 2021, 6:38 AM IST

கரோனா தொற்றுக்கு முன்பு நடிகர் சோனு சூட். இப்போது நீங்கள் மெசியா, சூப்பர் மேன் எனப் புகழப்படுகிறீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்?

நான் ஒரு சாதாரண மனிதர். பொதுமக்களுடன் ஒருவர் இணைந்திருக்கும்போதுதான் ஒருவர் எதார்த்தத்தை பற்றி தெரிந்துக்கொள்வார் என நான் நம்புகிறேன். ஒருவருக்கு உதவி தேவைப்படும் போது அதை நாம் செய்தால் அதை விட ஒரு மன திருப்தி எதுவும் இருக்க முடியாது. மக்கள் என்னை அவர்களில் ஒருவராகக் கருதும் வரை அவர்கள் எனக்கு வழங்கிய பெயர்கள் எதுவுமில்லை.

சோனுசூட் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி

மக்கள் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். நீங்கள் அவர்களை ஏமாற்றவும் இல்லை. இந்த நம்பிக்கையை எப்படி நீங்கள் பெற்றுள்ளீர்கள். அடுத்து என்ன செய்ய திட்டம் வைத்துள்ளீர்கள்?

மக்களுக்கு உதவி எப்போதும் தேவை. இந்த கரோனா தொற்று காலத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலங்கள் என் பார்வைக்கு வந்தது. தங்கள் குழந்தைகளுடன் பலர் இருப்பிடத்தை காலி செய்து காலில் செருப்பின்றி சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இந்த காட்சியை பார்த்த எனக்கு அவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

உதவி தேவைப்படும் நபர்களுக்கு அவர்களின் தேவையை பூர்த்தி செய்தேன். இந்த செயலுக்கு நாடு முழுவதும் ஆதரவு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ரயில்கள், பேருந்துகள், விமானம் மூலம் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மக்களை அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தோம். வேலையிழந்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது போன்ற சேவைகள் செய்யும் போது என் அம்மா என்னை சமூகத்திற்கு ஏதேனும் பயனளிக்க ஊக்குவித்ததை நினைவில் வைத்தேன்.

கரோனா தொற்று காலத்தில் இந்தியா ஸ்தம்பித்த நிலையில், சோனு சூட்டுவால் இந்த ஏற்பாடுகள் எப்படி செய்ய முடிந்தது?

நான் எனக்கான தனி பாதையை உருவாக்கினேன். எனக்கு நிறைய செல்வாக்கு நிறைந்த நபர்கள், உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் எனக்கு தெரியும். அவர்களை இந்த நேரத்தில் சரியாக பயன்படுத்திக்கொண்டேன்.

நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடக்கூடாது?

அரசியல் அற்புதமானது. துரதிர்ஷ்டவசமாக, மக்கள் அதற்கு ஒரு வண்ணம் கொடுத்துள்ளனர். நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் ஒரு நடிகராக நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன். நான் ஏற்கனவே கூறியது போல எனக்கான பாதையை உருவாக்குகிறேன். நான் அரசியலை வெறுக்கவில்லை. நான் அதற்கு இன்னும் தயாரகவில்லை அவ்வளவே. என்னால் இன்னும் மக்களுக்கு உதவ முடிகிறது. அரசியல்வாதியாக மாற நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. அப்படி அரசியல்வாதியாக நான் உணர்ந்தால் அதை நிச்சயம் அறிவிப்பேன்.

அரசாங்கத்தை விட மக்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அரசாங்கம் முறையாக செயல்படவில்லை என்பது அல்ல. அரசாங்கம் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவி வருகிறது. அதே நேரத்தில் பொதுமக்களாகிய நாமும் ஒருவருக்கு ஒருவர் முடிந்தவரை உதவி செய்யவேணடும். இது நமது கடமை.

நீங்கள் மக்களைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்று சொல்கிறீர்கள், ஆனால் சில தலைவர்கள் அதை நம்பவில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உதவுகிறீர்கள் என்றும் கூறப்படுகிறது. அதுபற்றி உங்கள் கருத்து.

எனக்கு ஒரு லட்சியம் உள்ளது அதை நோக்கி நான் பயணிக்கிறேன். தொடர்ந்து நான் அதை செய்வேன் மக்களுக்கு உதவுவது குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு கவலையில்லை.

நீங்கள் அரசியலை வெறுக்கவில்லை என சொன்னீர்கள். ஏதேனும் ஒரு மாநிலத்தில் அல்லது தொகுதியில் களத்தில் இறங்க விரும்புகிறீர்களா?

எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரியானவை என்று நான் நினைக்கிறேன். எனக்கு எல்லா இடங்களிலிருந்தும் அன்பும் மரியாதையும் கிடைக்கிறது. நான் பஞ்சாபிலிருந்து வந்தவன். ஆனால் நான் மகாராஷ்டிராவில் இருக்கிறேன். எனது பெரும்பாலான பணிகள் ஆந்திரா-தெலுங்கானாவில் இருக்கின்றது. இப்போது நான் கர்நாடகாவில் ஆக்ஸிஜன் ஆலையைத் திறக்கப் போகிறேன். என்னை மதம், ஜாதி, அரசு ஆகியவை கட்டுப்படுத்தாது.

நீங்கள் உங்கள் உடல் நலத்தை சரியாக பேணிக்காத்தும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள், அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உடற்பயிற்சி உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். மக்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது மிக முக்கியம். கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டாதல் எனக்கு ஐந்தே நாள்களில் கரோனா நோய்த் தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்தேன் என நம்புகிறேன்.

சோனுசூட் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகப் பேட்டி

உங்களை அடிப்படையாகக் கொண்ட நிறைய மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் உலா வருகிறது. அதை ஏப்படி பார்க்கிறீர்கள்?

சமூகவலைதளத்தின் மிகப்பெரிய சக்தி, நாம் கிட்டத்தட்ட மக்களின் வீடுகளுக்கு செல்கிறோம். இதன் மூலம் மக்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களாக இருப்பதாக உணர்கிறேன்.

இப்போது உங்களுக்கு திரைப்படங்களை விட, சமூக சேவையே முழுநேர வேலையாகிவிட்டது போல் தெரிகிறது?

இதை நானே என்னிடம் பல முறை கேட்டுள்ளேன். அதற்கான பதிலை கண்டுப்பிடிக்க முயற்சி செய்து வருகிறேன். என்னிடம் பலர் உதவி கேட்டு வருகின்றனர். சிலர் சிகிச்சைக்கு உதவி செய்ய கோரிக்கை வைக்கின்றனர். சிலர் வேலைவாய்ப்புகாக கோரிக்கை வைக்கின்றனர். இதுபோன்ற தேவைகளை கண்காணிக்க ஒரு குழுவை உருவாக்கியுள்ளேன். அவர்களால் அதைத் தீர்க்க முடியாதபோது, அவர்கள் என்னை அணுகுவார்கள். அப்போது இந்த கேள்வி என்னிடம் எழும்.

உங்கள் பெயரை பத்ம விபூஷன், பாரத் ரத்னா உள்ளிட்ட விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒரு படி மேல நடிகை ஹுமா குரேஷி உங்களை பிரதமராக பார்க்க ஆசை படுவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி உங்களது கருத்து.

கரோனா நோய்த்தொற்று காலத்தில் மக்களுக்கு உதவிய போது நாங்கள் பல பிரச்சனைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டோம். உதாரணமாக, மகாராஷ்டிராவிலிருந்து பீகார் வரை ரயில் இல்லை. அந்த நேரத்தில் நான் என் வீட்டில் கணினி முன்பு அமர்ந்திருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்காது. நாங்களே களத்தில் இறங்கி அதற்கான தீர்வு காண முயன்றோம். எனக்கு மக்களுக்கு உதவும் ஆர்வமும் எண்ணமும் இருக்கிறது. அதை வெளியப்பட்ட எந்த பதவியும் தேவையில்லை. நல்ல மனமும் உறுதியான எண்ணமும் இருந்தால் அதுவே போதும்.

நடிகை கங்கனா ரனாவத், ட்வீட்டில் உங்களை ஏமாற்றுக்காரர், மோசடியாளர் என குறிப்பிட்டார். அதற்கு உங்களது பதில்?

கங்கனா ரனாவத்திற்கு என சமூகவலைதளப்பக்கங்கள் உள்ளது. கங்கனா என்னை குறித்து அப்படி உணர்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. அவர் பதிவிடும் ட்வீட் என்னை ஒன்று செய்யாது. நான் 135 கோடி மக்களுடன் சேர்ந்து நடக்க விரும்புகிறேன். அதில் சில ஆயிரம் பேருக்கு என்னைபிடிக்கவில்லை என்றால் பிரவாயில்லை. கங்கனா அப்படி சென்னதற்கு அவருக்கு பதிலிளிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை.

இப்போது நீங்கள் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குவதில் இறங்கியுள்ளீர்கள்?

கடந்த ஆண்டு, நாங்கள் 2,400 பேருக்கு உதவித்தொகை வழங்கினோம். ஏராளமான ஏழை குடும்பங்களிலிருந்து உதவி செய்யுமாறு எனக்கு தினமும் கோரிக்கை வருகிறது. இதிலிருந்து உண்மையில் உதவி தேவைப்படுவோரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

உங்கள் குடும்பம் அதிலும் குறிப்பாக உங்கள் குழந்தைகள் உங்களின் எந்த முகத்தை விரும்புகிறார்கள்? நடிகர் அல்லது சமூக சேவகர்?

நான் வருவதையும் போவதையும் என் குழந்தைகள் பார்க்கிறார்கள். அவர்களுடன் மூன்று நாட்கள் பேசமுடியால் போகும். கடந்த 15 மாதங்களும் இதே நிலைதான் தொடர்கிறது. இப்போது குடும்பத்தினர், குழந்தைகளுடன் செலவிட என்னால் நேரம் ஒதுக்கமுடியவில்லை. உதவும் படி பல அழைப்புகள் வருகிறது. அதை நாங்கள் இப்போது ஒழுங்குப்படுத்தி வருகிறோம். பலருக்கு உதவ மனம் விரும்புகிறது. ஆனால் ஒரு சிலருக்கு உதவமுடிகிறது. ஒரு நாளைக்கு 200 பேருக்கு உதவவேண்டும் என நினைப்போம். ஆனால் 2,000 பேரிடமிருந்து உதவி கோரி அழைப்பார்கள்.

உங்களது புதியப்படங்கள் குறித்தான தகவல்கள் ஏதேனும் தெரிவிக்க முடியுமா?

யஷ் ராஜின் 'பிருத்விராஜ் சவுகான்' நவம்பரில் வெளியாகும். சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் 'ஆச்சார்யா' படத்திலும் நடிக்கிறேன். அதும் விரைவில் திரைக்கு வரும். எனது சொந்த தயாரிப்பில் உருவாக திரைப்படம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புக்கு செல்ல தயாராகி வருகிறது. திரைப்படங்கள் தொடர்ந்து வரும். அதே போன்று நான் தொடர்ந்து சமூகத்திற்கு பங்களித்தும் வருவேன்.

Last Updated : Jun 15, 2021, 6:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details