இதையடுத்து தற்போது 'தி ஆர்மி ஆஃப் தி டெட்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துவரும் இவர், அதன் படப்பிடிப்பில் பங்கேற்றுவருகிறார்.
இந்த நிலையில், திரைக் கலைஞர்களின் தனிப்பட்ட திறமையையும், சிறப்பம்சத்தையும் எடுத்துக்காட்டி கெளரவித்துவரும் ஃபிலிம் இண்டிபென்டென்ட் என்ற அமைப்பு புதிய அலை பாய்ச்சும் நடிகர்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து ஹூமா குரேஷியின் பெயர் இடம்பிடித்துள்ளது.
சமீபத்தில் வெளியான 'லெயிலா' என்ற நெட்பிளிக்ஸ் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு இந்த கெளரவம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.