தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

OTTயில் ரூ.120 கோடிக்கு விற்பனையான 'லக்ஷ்மி பாம்'! - அக்ஷய் குமாரின் லக்ஷமி பாம் ஹாட்ஸ்டாரில் வெளியீடு

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் திரைப்படம் 'லக்ஷ்மி பாம்'. 'காஞ்சனா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ஹிந்தி ரீமேக் படம் 'லக்ஷ்மி பாம்'. இந்தத் திரைப்படம் பிரபல OTT தளத்திற்கு 120 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாம்.

Akshay Kumar starrer laxmmi bomb digitally sold
Akshay Kumar starrer laxmmi bomb digitally sold

By

Published : May 29, 2020, 11:15 AM IST

Updated : Jun 30, 2020, 8:16 AM IST

பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'லக்ஷ்மி பாம்'. ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி தமிழில் ஹிட் அடித்த 'காஞ்சனா' திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக் திரைப்படம்தான் இந்த 'லக்ஷ்மி பாம்'. லாரன்ஸ் ஹிந்தியில் அறிமுகமாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அக்ஷய் குமாருடன் கியாரா அத்வானியும் நடித்துள்ளார்.

'காஞ்சனா'

தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பல திரைப்படங்கள் OTTயில் வெளியாகின்றன. இந்த தருணத்தில் 'லக்ஷ்மி பாம்' திரைப்படமும் நேரடியாக திரையரங்குக்குச் செல்லாமல் OTTயில் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் திரைப்படம் தற்போது 120 கோடி ரூபாய்க்கு மேல் ஹாட்ஸ்டார் தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.

பொதுவாகவே இதுபோன்று OTT தளத்துக்கு விற்கப்படும் திரைப்படங்கள் 60 முதல் 70 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக OTTக்கு வருவதால் இந்தப் படம் இவ்வளவு பெரிய தொகையாம்.

'லக்ஷமி பாம்'

இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் வெளியாகவில்லை. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பாக்கி இருக்கின்றன என்றும் ஊரடங்கு முடிந்த பின்னர் அந்த வேலைகள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திரைப்படம் OTTயில் வெளியாகும் தேதி இன்னும் முடிவாகவில்லை. ஊரடங்கு முடிந்த பின்னரே அது குறித்த செய்தி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க... கரோனா பாதிப்பு: தேசிய நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை வழங்கிய அக்ஷய் குமார்!

Last Updated : Jun 30, 2020, 8:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details