சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை; நீதிமன்றத்தில் சிபிஐ எளிதில் நிரூபிக்கும்: சுப்பிரமணியன் சுவாமி - சுப்ரமணிய சுவாமி
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் வெறும் தற்கொலை அல்ல, சதித்திட்டம் தீட்டி கொலை செய்யப்பட்டதற்கு ஏராளமான சான்றுகள் இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாலிவுட் சினிமாவில் நிலவும் குடும்ப ஆதிக்கத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக காரணம் கூறப்பட்டுவந்த நிலையில், அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது வழக்கின் போக்கையே மாற்றியது.
தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை இந்தியாவின் முப்பெரும் துறைகளான சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.