தேசிய ஊரடங்கையடுத்து ஹிருத்திக் ரோஷன் வீட்டில் அவரது முன்னாள் மனைவி சுஸான் குழந்தைகளுக்காக தற்காலிகமாக தங்கியுள்ளார். இவர்களுக்கு ஹிருதன் ரோஷன், ஹ்ரேகான் ரோஷன் என்ற இருமகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் விவாகரத்திற்கு பின் ஹிருத்திக் ரோஷனுடன் தங்கியுள்ளனர்.
சமீபத்தில் சுஸான் வீடியோ ஒன்றை தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் பால்கனியில் ஹிருத்திக் ரோஷன் தனது மகன்களுடன் நின்று இயற்கையை ரசிக்கிறார். இந்த வீடியோவுடன் 'வில்லியம் ஹென்றி டேவிஸ்' எழுதிய 'லீஷர்' கவிதையின் சில வரிகளையும் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவை அவர் பதிவிட்ட சில மணிநேரத்தில் சமூகவலைதளத்தில் வேகமாக பரவ தொடங்கியது. இந்த வீடியோவை உன்னிப்பாக பார்த்த ரசிகர் ஒருவர், ''ஹிருத்திக் கையில் ஒரு சிகரெட் இருக்கிறதா? அல்லது நான் தவறாக பார்க்கிறோனா?'' என பதிவிட்டிருந்தார்.
இவரையடுத்து ரசிகர்கள் பலர் அந்த வீடியோவை உன்னிப்பாக கவனித்து ஹிருத்திக் ரோஷனை குறை கூறி வந்தனர். இதனையடுத்து ஹிருத்திக் ரோஷன் தனது ட்வீட்டர் வாயிலாக கூறுகையில், ''நான் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவன். நான் க்ரிஷாக இருந்தால் இந்த கரோனா வைரஸை ஒழித்தப்பின் நான் முதலில் செய்வது இந்த கிரகத்தின் கடைசி சிகிரெட்டையும் அழிப்பதாகும்'' என ட்வீட் செய்துள்ளார்.
ஹிருத்திக் ரோஷனின் இந்த ட்வீட்டை பார்த்த அந்த ரசிகர், ''எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எனது வினாவுக்கு பதிலளிப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு தெரியும் நீங்கள் புகைப்பிடிக்கதாவர் என்று உங்களை மிகவும் நேசிக்கிறேன்'' என பதிலளித்திருந்தார்.
தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மன நலத்தை சரியாக வைத்துக்கொள்ள வைட்டமின் 'டி' அளவை சரியாக எடுத்துக்கொள்ளவேண்டும் என ஹிருத்திக் பரிந்துரைத்ததும் நெட்டிசன்களிடையே அதிகம் வரவேற்கப்பட்டது.