நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கிய இந்தப் படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னணி நடிகர்கள் ஒரே திரையில் எதிரும் புதிருமாக நடித்திருந்தது மக்களை வெகுவாகக் கவர்ந்து.
விஜய் சேதுபதியின் 'வேதா' கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன்! - விக்ரம் வேதா திரைப்படம்
'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hrithik Roshan
தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. தமிழில் இயக்கிய புஷ்கர் - காயத்ரியே இந்தியில் இயக்கவுள்ளார். இந்தியில் ஆமீர் கான், சைஃப் அலிகான் நடிக்கவுள்ளனர். விஜய் சேதுபதியாக ஹிருத்திக் ரோஷன், மாதவனாக சைஃப் அலி கான் நடிக்கின்றனர்.
ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், பிளான் சி ஸ்டுடியோஸ் ஆகியோருடன் இணைந்து சசிகாந்த் இதனைத் தயாரிக்கவுள்ளார். கரோனா பொதுமுடக்கம் காரணமாகப் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில், இந்தாண்டு இப்படத்தின் படப்பு தொடங்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.