நடிகர் ஹிருத்திக் ரோஷன் 'க்ரிஷ்' என்னும் சூப்பர் ஹீரோ படவரிசையில் நடித்து பெரும் வெற்றி பெற்றார். இந்தப் படத்தை அவரது தந்தை ராகேஷ் ரோஷன் தயாரித்து இயக்கினார். இந்தப் படத்தை தொடர்ந்து இறங்கிய மற்ற இரண்டு படங்களும் நல்ல ஹிட் கொடுத்தன.
தற்போது 'க்ரிஷ் 4' எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஹிருத்திக் ரோஷன் நாயகன் - வில்லன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், க்ரிஷ் படத்தில் நடித்த ஜாதூவுடன் மீண்டும் இணைய உள்ளார்.
இது குறித்து தயாரிப்பு குழு வட்டராங்கள் தெரிவிக்கையில், 'க்ரிஷ் 4' திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 'க்ரிஷ் 3' இல் ரோஹித் மெஹ்ரா (ஹிருத்திக் ரோஷன்) இறந்து விடுகிறார். இதனையடுத்து 'க்ரிஷ்' தனது சக்தியை பயன்படுத்தி ஏலியானா ஜாடூவை மீண்டும் திரையில் கொண்டு வருகிறார்.