உனக்காக ரசிகர்கள் இந்த உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டனர் - 'கேதர்நாத்' அபிஷேக் கபூர் - இயக்குனர் அபிஷேக் கபூர்
மும்பை: இயக்குநர் அபிஷேக் கபூர், சுஷாந்த் உடனான நினைவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில், சுஷாந்த் சிங் - சாரா அலி கான் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கேதார்நாத்'. இந்த படமானது 2013ஆம் ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டது.
இப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் நிறைவடையவுள்ளது. இதனை முன்னிட்டு அபிஷேக் கபூர், படப்பிடிப்பின்போது சுஷாந்த் உடனான நினைவுகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அபிஷேக் கபூர் கூறியதாவது, 'கேதார்நாத் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, இதேநாளில் நாம் நம் கடைசி நடனத்தை ஆடிக் கொண்டிருந்தோம். நாம் இணைந்து இருந்த அந்த பிரகாசமான நினைவுகளை நினைத்துப்பார்க்கிறேன் சகோதரா.
உன்னுடைய ரசிகர்களால் நீ எந்த அளவுக்கு நேசிக்கப்படுகிறாய் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உன்னை யாரும் நேசிக்கவில்லை என்று சில கெட்ட மனங்கள் உன்னிடம் சொல்லி இருக்கக் கூடாது என்றும் நான் விரும்புகிறேன்.