தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆவணப்படம் உருவான விதம் - மனம்திறந்த இயக்குநர்கள் - அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆவணப்படம்

முதலில் ஆம் ஆத்மி கட்சியினர் எங்களை கல்லூரி மாணவர்கள் என நினைத்துவிட்டனர். எங்களை தொந்தரவு செய்யாமல் எதை வேண்டுமானலும் படம்பிடித்துக்கொள்ளுங்கள் என்பது போல நடந்துகொண்டார்கள்.

An Insignificant Man
An Insignificant Man

By

Published : Nov 19, 2020, 3:54 PM IST

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆவணப்படம் (An Insignificant Man) வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதில் பணியாற்றிய இணை இயக்குநர்கள் குஷ்பூ ரன்கா, வினய் சுக்லா ஆகியோர் அதன் உருவாக்கம் குறித்து மனம்திறந்துள்ளனர்.

இதுகுறித்து பேட்டியளித்த குஷ்பூ, வினய், இப்படத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை எளிதில் சம்மதிக்க வைத்துவிட்டோம். அப்போது அவர் புதிதாக வாக்கரசியலுக்கு வந்தவர். நாங்கள் தினமும் அவருடன் படப்பிடிப்பு நடத்துவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. முதலில் ஆம் ஆத்மி கட்சியினர் எங்களை கல்லூரி மாணவர்கள் என நினைத்துவிட்டனர். எங்களை தொந்தரவு செய்யாமல் எதை வேண்டுமானலும் படம்பிடித்துக்கொள்ளுங்கள் என்பது போல நடந்துகொண்டார்கள்.

சில நாட்களுக்குப் பிறகே நாங்கள் இயக்குநர்கள் என்பது அவர்களுக்கு தெரியவந்தது. 400 மணி நேரத்துக்கு வீடியோ எடுத்து, அதை 90 நிமிட ஆவணப்படமாக்கினோம் என தெரிவித்தனர். இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் காந்தி தயாரித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details