தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கலக்கல் காமெடியான #HouseFull4Trailer - அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஹவுஸ்ஃபுல் 4 (#Housefull4) படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

#HouseFull4Trailer

By

Published : Sep 27, 2019, 4:24 PM IST

ஃபர்ஹாத் சம்ஜி இயக்கியுள்ள ‘ஹவுஸ்ஃபுல் 4’ (#Housefull4) படத்தில், அக்‌ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், பூஜா ஹெக்டே, க்ரிட்டி சனோன், பாபி தியோல், க்ரிட்டி கர்பந்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு சொஹெல் சென், விபின் பட்வா, தனிஷ்க் பாக்ஜி, குரு ரந்தவா, ராஜத் நாக்பால், தேவி ஸ்ரீ பிரசாத் என ஆறு பேர் இசையமைத்துள்ளனர். பாலிவுட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சஜித் நாதியாத்வாலா தயாரித்துள்ளார். ஹவுஸ்ஃபுல் படத்தின் முதல் மூன்று பாகங்கள் போலவே இதுவும் மாபெரும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’ஹவுஸ்ஃபுல் 4’ பாலிவுட் அடல்ட் காமெடிகளுடன் தயாராகியிருப்பது அதன் ட்ரெய்லரிலேயே தெரிகிறது. தீபாவளி அன்று இந்த படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details