சூர்யாவின் ‘சிங்கம்’ படத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் அக்ஷய் குமார் தொடர்ந்து நடித்துவரும் படம் ‘ஹவுஸ்ஃபுல்’ (Housefull). இது நான்காம் பாகத்தை எட்டியுள்ளது. ஃபர்ஹாத் சம்ஜி இயக்கியுள்ள ‘ஹவுஸ்ஃபுல் 4’ (#Housefull4) படத்தில், அக்ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், பூஜா ஹெக்டே, க்ரிட்டி சனோன், பாபி தியோல், க்ரிட்டி கர்பந்தா என நட்சத்திர பட்டாளமே இதில் இணைந்துள்ளது.
இந்தப் படத்துக்கு சொஹெல் சென், விபின் பட்வா, தனிஷ்க் பாக்ஜி, குரு ரந்தவா, ராஜத் நாக்பால், தேவி ஸ்ரீ பிரசாத் என ஆறு பேர் இசையமைத்துள்ளனர். பாலிவுட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இத்திரைப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.