தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'புதிய விளம்பர யுத்தியை கையாளும் ஹவுஸ்ஃபுல்-4 படக்குழு' - akshykumar on train

இந்திய ரயில்வே துறை வருவாய் பிரச்னையை தீர்வு காணும் விதமாக 'Promotion on wheels' என்ற புதிய விளம்பர யுத்தியை 'ஹவுஸ்ஃபுல்-4' படக்குழு மேற்கொண்டு வருகிறது.

HF4

By

Published : Oct 20, 2019, 5:18 PM IST

ஃபர்ஹாத் சம்ஜி இயக்கியுள்ள ‘ஹவுஸ்ஃபுல் 4’ (#Housefull4) படத்தில் அக்‌ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், பூஜா ஹெக்டே, க்ரிட்டி சனோன், பாபி தியோல், க்ரிட்டி கர்பந்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்

இந்தப் படத்துக்கு சொஹெல் சென், விபின் பட்வா, தனிஷ்க் பாக்ஜி, குரு ரந்தவா, ராஜத் நாக்பால், தேவி ஸ்ரீ பிரசாத் என ஆறு பேர் இசையமைத்துள்ளனர். பாலிவுட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

பயணிகளுடன் அக்ஷயகுமார்

தற்போது இப்படத்தின் புரோமேஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. இதுவரை இல்லா வகையில் படக்குழு புதிய விளம்பர யுத்திகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய ரயில்வே துறை வருவாய் பிரச்னையை தீர்வுகாணும் விதமாக ஒரு ஆக்கபூர்வமான யோசனையை கொண்டு வந்துள்ளனர். விளையாட்டு முதல் பொழுதுபோக்கு வரை பல்வேறு துறைகளை ஊக்குவிப்பதன் மூலம் ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஒரு சிறப்பு ரயில் மூலம் 'Promotion on wheels' என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயிலை பல்வேறு விளம்பர நடவடிக்கைகளுக்காக முன்பதிவு செய்யலாம். இதன் விளைவாக நல்ல விளம்பர யோசனை மட்டுமல்லாமலாது இந்திய ரயில்வே துறைக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும். 'Promotion on wheels' என்ற இந்த சிறப்பு ரயில் மூலம் ஹவுஸ்ஃபுல்-4 படக்குழு மும்பையில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்த முதல் படக்குழு ஆகும்.

ஹவுஸ்ஃபுல்-4 டீம்

இந்த பயணத்தின் போது பல்வேறு நிலையங்களில் படத்திற்கான விளம்பரத்தை வெளிப்படுத்தியும் வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் #HousefullExpress எனும் ஹேஸ்டேகில் ரசிகர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், இந்திய ரயில்வேயின் இந்த புதுமையான நடவடிக்கை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது கலைத்துறை மற்றும் இந்திய ரயில்வேதுறையை ஒன்றிணைத்ததாகும். இந்த புதுமையான அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவினர் மற்றும் அனைத்து கலைத்துறையினரும் உற்சாகமாக உள்ளனர் என்றார்.

இதையும் வாசிங்க: #TheBalaChallenge: 'ஆல் தி பெஸ்ட் ஒன் பாலா டூ அனதர் பாலா' அக்ஷய் குமாரின் புதிய வீடியோ

ABOUT THE AUTHOR

...view details