பிரபல மல்யுத்த வீரரான ஜான் சீனா, ’தி மரைன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது உலகப் புகழ்பெற்ற ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படத்தின் 9ஆம் பாகத்தில் நடித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படம் ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜான் சீனா, பிக் பாஸ் சீசன் 13-இல் பங்கேற்றுள்ள அசிம் ரியாஸ் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அசிம் ரியாஸ் புகைப்படத்தை பதிவிட்ட ஜான் சீனா, அதுபற்றி எந்த காரணமும் சொல்லவில்லை. முன்னதாக, நான் பதிவிடும் புகைப்படங்களுக்கு எந்த லாஜிக்கையும் எதிர்பார்க்காதீர்கள் என ஜான் சீனா குறிப்பிட்டிருந்தார். அதேபோல் அசிம் ரியாஸ் படத்தை பதிவிட்டதற்கான காரணத்தையும் அவர் கூறவில்லை.
பாலிவுட் திரையுலகில் சாதிப்பதற்காக போராடி வருபவர் நடிகர் அசிம் ரியாஸ். தற்போது பிக் பாஸ் சீசனில் பங்கேற்றுள்ள அவரது புகைப்படத்தை ஜான் சீனா ஷேர் செய்திருப்பது, அசிமுக்கு ஆதரவாக இருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.