தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெப் சீரிஸில் கால் பதிக்கும் அனுஷ்கா ஷர்மா - பாதாள் லோக்

அனுஷ்கா ஷர்மா தயாரித்து நடிக்கும் 'பாதாள் லோக்' வெப் சீரிஸ் வருகிற மே 15ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

வெப் சீரிஸில் கால் பதிக்கும் அனுஷ்கா ஷர்மா
வெப் சீரிஸில் கால் பதிக்கும் அனுஷ்கா ஷர்மா

By

Published : Apr 24, 2020, 6:18 PM IST

டிஜிட்டல் தளத்தில் அனுஷ்கா ஷர்மா தோன்றவிருக்கும் த்ரில்லர் வெப் சீரிஸான 'பாதாள் லோக்' வருகிற மே 15ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படவுள்ளது.

சிஜிஐ தொழில்நுட்பத்தில் மிரட்டும் இந்தத் தொடரின் ட்ரெய்லரை, தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, இந்த அறிவிப்பை அனுஷ்கா ஷர்மா வெளியிட்டுள்ளார்.

'நீங்கள் வாழும் உலகத்தை, இனி வேறு கோணத்தில் பார்க்க வைக்கும் க்ரைம் த்ரில்லர், பாதாள் லோக்' எனக் குறிப்பிட்டு அனுஷ்கா ட்ரெய்லரைப் பகிர்ந்துள்ளார்.

நீரஜ் கபி, குல் பனக், ஜெய்தீப் அல்வத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தத் தொடர், அனுஷ்கா ஷர்மாவின் க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த வெப் சீரிஸ் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியிடப்படவுள்ளது.

இதையும் படிங்க:ஆமீர்கான் இளம் வயதில் தன் படத்தின் போஸ்டர் ஒட்டிய புகைப்படம் வைரல்

ABOUT THE AUTHOR

...view details