'தனாஜி' படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மைதான்'. அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிவரும் இப்படத்தில், சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இதில், அஜய் தேவ்கன் உடன் இணைந்து பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இத்திரைப்படம் உருவாகிவருகிறது.
கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தற்போது 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி திரைக்குவரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்காக மும்பையில் போடப்பட்டிருந்த அரங்குகள் அனைத்தையும் படக்குழு அகற்றிவிட்டது. கரோனா தொற்று அச்சுறுத்தல் முடிந்தவுடன் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:திரைப்படமாக உருவெடுக்கும் கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்