தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்த வருஷம் அப்ராம்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படி தான் - கெளரிகான் வெளியிட்ட வீடியோ - அப்ராம்ஸ்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து கெளரிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

SRK
SRK

By

Published : May 29, 2020, 9:13 PM IST

உலகம் முழுவதும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பாலிவுட் பாஷா நடிகர் ஷாருக்கான். 2018ஆம் ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வியடைந்தது. இதனையடுத்து புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார்.

ஷாருக்கான் - கெளரிகான் தம்பதிக்கு ஆரியகான், சுஹானா கான், அப்ராம்ஸ் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் அப்ராம்ஸ் 2013 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் பிறந்தார்.

நேற்று (மே 28) ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம்ஸ் தனது ஏழாவது வயதில் அடிவைத்துள்ளார். இதனயைடுத்து ஷாருக்கானின் மனைவி கெளரி கான் தனது சமூகவலைத்தளப்பக்கதில் அப்ராம்ஸ் பிறந்தநாள் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அப்ராம்ஸூக்கு பிடித்த பாடல்கள் ஒலிக்க ஷாருக்கான் 'scary' கதை புத்தகத்தை படித்துக்கொண்டிருக்க 'scary' கதைகளை அப்ராம்ஸ் கேட்டுக்கொண்டிருக்கிறான். அவனது பிறந்தநாள் கொண்டாட்டம் அவனுக்கு பிடித்தமான பாடல், பிடித்தமான நபர், பிடித்தமான புத்தகம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் சமூகவலைத்தளங்கள் வாயிலாக அப்ராம்ஸூக்கு வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு மகனுடன் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கிங் கான்

ABOUT THE AUTHOR

...view details