தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இன்டர்வலே இல்லாத விஜய் சேதுபதி படம்! - கத்ரினா கைப்

விஜய் சேதுபதி, கத்ரினா கைப் இருவரும் இதன் படப்பிடிப்புக்காக கோவாவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Katrina Kaif-Vijay Sethupathi's upcoming film
Katrina Kaif-Vijay Sethupathi's upcoming film

By

Published : Jan 22, 2021, 7:48 PM IST

ஹைதராபாத்: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்தைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

பட்லாபூர், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாக அறியப்படுபவர் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். இவர் விஜய் சேதுபதியை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

த்ரில்லர் ரக படங்களுக்கு பெயர் பெற்ற ஸ்ரீராம் ராகவன், இந்தப் படத்தை இடைவேளை இல்லாமல் 90 நிமிடங்களில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சேதுபதி, கத்ரினா கைப் இருவரும் இதன் படப்பிடிப்புக்காக கோவாவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details