பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹேமமாலினி. பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான இவருக்கு சமீப காலமாக உடல் நிலை சரியில்லை என சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹேமா மாலினி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "எனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவுகின்றன. எனக்கு எதுவும் நடக்கவில்லை, நான் நலமாக ஆரோக்கியமாக இருக்கிறேன். இதனை என் அன்புக்குரியவர்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். கிருஷ்ணரின் அருளால் நான் நலமாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க... "நலமாக உள்ளார்" - அம்மாவின் ஆரோக்கியம் குறித்து ஈஷா விளக்கம்!