தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அபிஷேக் பச்சனை வரவேற்கக் காத்திருக்கிறோம் - 'தி பிக் புல்'லின் தயாரிப்பாளர்!

மும்பை: கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அபிஷேக் பச்சன் டிஸ்சார்ஜ் தற்போது இல்லை என கூறியுள்ளார்.

அபிஷேக் பச்சன்
அபிஷேக் பச்சன்

By

Published : Aug 6, 2020, 3:33 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நான்கு பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சமீபத்தில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா, அமிதாப்பச்சன் ஆகியோர் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இதில் அபிஷேக் பச்சன் மட்டும் மருத்துவமனையிலிருந்து இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி அபிஷேக் பச்சனின் வரவிருக்கும் 'தி பிக் புல்'லின் தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் பிரார்த்தனை செய்துள்ளார். இதுகுறித்து ஆனந்த் பண்டிட் கூறுகையில், அபிஷேக்கின் குடும்பத்தினர் நோய் தொற்றிலிருந்து மீண்டு விட்டனர். ஆனால் அபிஷேக் மட்டும் மருத்துவமனையில் தனிமையாக இருக்கிறார். இது மிகவும் கடினம்.நான் அவருக்கு ஒவ்வொரு முறையும் போன் செய்யும் போது படப்பிடிப்பில் எவ்வாறு பாசிட்டிவாக பேசினாரோ அப்படியே தற்போதும் என்னுடன் பேசி வருகிறார். இவ்வளவு நம்பிக்கை மத்தியில் அவர் இதைக் கடந்து செல்வதைப் பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது. அவர் ஒரு போராளி. விரைவில் வீடு திரும்புவார்.

அதுமட்டுமல்லாது விரைவில் படப்பிடிப்பு தளத்திற்கும் வருவார். அவரது ரசிகர்கள் அவர் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். எங்கள் முழு படக்குழுவும் அவரை வரவேற்கக் காத்திருக்கிறது என்று கூறினார். இதற்கிடையில் அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெள்ளைப் பலகையில் மருத்துவமனையில் இருந்த நாட்களில் எண்ணிக்கை, உணவு, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் செவிலியர்களின் பெயர்கள் உள்ளிட்டவை எழுதிய புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். அதன் கீழ் மருத்துவமனை நாள்: 26, டிஸ்சார்ஜ் இப்போது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இயக்குநர் குக்கி குலாட்டி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் சமீபத்தில் நடித்திருந்த படம் தி பிக் புல். இப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இந்தியாவில் கடந்த 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்கு சந்தை மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details