தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விகாஸ் துபேவின் வாழ்க்கையை திரைப்படமாக இயக்கும் 'சிம்ரன்' பட இயக்குநர் - இயக்குநர் ஹன்ஸல் மேத்தா

மும்பை: கான்பூர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக உள்ளது.

ஹன்ஸல் மேத்தா
ஹன்ஸல் மேத்தா

By

Published : Aug 11, 2020, 2:32 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர் விகாஸ் துபே. அவரை கைது செய்வதற்காக காவல் துறையினர் அவரது கிராமத்திற்கு சென்றபோது, விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் டிஎஸ்பி உள்பட எட்டு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து காவல் துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் விகாஸ் துபேவின் கூட்டாளிகள் பலரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி விகாஸ் துபேவும் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தற்போது விகாஸ் துபேயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட் திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை 'ஷாஹித்', 'அலிகார்', 'சிம்ரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஹன்ஸல் மேத்தா இயக்குகிறார். போலராய்டு மீடியாவுடன் இணைந்து தயாரிப்பாளர் ஷைலேஷ் ஆர் சிங் தயாரிக்கிறார்.

இப்படம் குறித்து ஹன்ஸல் மேத்தா, "இது நம் காலகட்டத்தின் அரசியலமைப்பின் பிரதிபலிப்பு. அரசியல்வாதிகள், குற்றவாளிகள், சட்டங்களை உருவாக்குபவர்கள் இந்த அமைப்பில் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றனர். இதை எப்படி அணுகப் போகிறேன் என்று என்னால் சீக்கிரம் சொல்லிவிடமுடியாது. ஆனால் நிச்சயமாக பொறுப்புடன் அணுகுவேன். இதிலிருந்து ஒரு பரபரப்பான, துணிச்சலான அரசியல் திரில்லர் கதை உருவாகும் என எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details