நடிகை கங்கனா ரணாவத் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்ததால் அந்தத் திரைப்படத்தை தான் நிராகரித்ததாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஒரு திரைப்படத்தில் கங்கனா ரணாவத் நடிக்க இருந்ததால் அந்தத் திரைப்படத்தை நிராகரித்துவிட்டேன். ஆழ்மனதில் எனக்கு சங்கடமாக இருந்தது.
இதுகுறித்து எனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களிடம் விளக்கினேன், அவர்கள் அதனை புரிந்துகொண்டனர். சில சமயங்களில் எது சரியானது என்று உணருவதே நல்லது. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்."
பி.சி. ஸ்ரீராம் எந்தத் திரைப்படத்தின் பெயரையும் சுட்டிக்காட்டவில்லை. இந்தப் பதிவுக்கு மக்கள் மத்தியில் கலப்படமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க...சுஷாந்த் சிங் வழக்கு: விசாரணை வளையத்தில் 25 பாலிவுட் பிரபலங்கள்!