தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'We Can Be Heroes' படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியங்கா - Netflix feature

ராபர்ட் ரோட்ரிக்கஸ் மற்றும் குழந்தை நட்சத்திரங்களுடன் பணியாற்றியதை மறக்க முடியாது. பழிக்குப் பழி தீர்க்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்றார் பிரியங்கா.

Priyanka Chopra
Priyanka Chopra

By

Published : Nov 20, 2020, 7:25 PM IST

மும்பை: ‘வி கேன் பி ஹீரோஸ்’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர், நெட்ப்ளிக்ஸின் ‘வி கேன் பி ஹீரோஸ்’ படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. அதிலும் ராபர்ட் ரோட்ரிக்கஸ் மற்றும் குழந்தை நட்சத்திரங்களுடன் பணியாற்றியதை மறக்க முடியாது. பழிக்குப் பழி தீர்க்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். புது வருடப் பிறப்பன்று இந்தப் படம் வெளியாகும். ரசிகர்களின் கருத்துக்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதில் பிரியங்காவுடன் பெட்ரோ பாஸ்கல், கிறிஸ்டியன் ஸ்லேடர், பாய்ட் ஹோல்ப்ரூக், சங் காங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்களாக அகிரா அக்பர், நாதன் ப்ளேர், ஆண்ட்ரியூ டயாஸ், ஹலா பின்லே ஆகியோர் நடித்து அசத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details